• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்-போக்குவரத்து பாதிப்பு

ByA.Tamilselvan

Dec 19, 2022

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென் தீப்பிடித்து எரித்தால் அப்பகுதியில் 1 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை போரூரை அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் என்பவர் தனியார் நிதி நிறுவன வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி திவ்யா, குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடன் நேற்று இரவு தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் சென்று கொண்டிருந்தார். காரை திவ்யா ஓட்டினார். கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதை கவனித்த திவ்யா உடனே காரை நிறுத்தியுள்ளார்.
பிறகு அனைவரும் காரில் இருந்து வெளியே வந்த சில நிமிடத்திலேயே கார் பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதில் காரின் முன் பகுதி முழுவதும் எரிந்து விட்டது. இதனால் கத்திப்பாரா பகுதியில் கிண்டி நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.