• Tue. Apr 16th, 2024

காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

ByA.Tamilselvan

Dec 19, 2022

சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த பாஜக அரசு மறுப்பு பாராளுமன்ற மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.
அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் வழங்கப்பட்ட ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸ்கள் அவைத் தலைவரின் பரிசீலனையில் இருந்தன. இந்நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியதும், மாநிலங்களவையில் சீன பிரச்சினையை எழுப்பிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது 267 விதியின் கீழ் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் சரியான முறையில் இல்லை என்று கூறிய அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவற்றை நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *