

இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ஏஆர் ரஹ்மான், ரோஜாவில் தொடங்கி தற்போது அட்ராங்கி ரே வரை, இவரது இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு! முன்னணி இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது நாயகன் என்ற பல சிறப்புகள் இவரது புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. ஆயினும் தன்னுடைய அடக்கத்தை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார்.
தமிழில் தற்போது பொன்னியின் செல்வன், இரவின் நிழல், வெந்து தணிந்தது காடு மற்றும் மாமன்னன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஏஆர் ரஹ்மான், அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் தனது 27வது திருமண நாளை கொண்டாடிய ஏஆர் ரஹ்மான், தன்னுடைய மனைவி சாய்ரா பானுவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒன்றாக இருப்பது ஒரு கலை என்றும் எல்லா புகழும் இறைவனுக்கே என்றும் கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.
