• Thu. Feb 13th, 2025

ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்த ஆரி!

கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய பிக்பாஸ் ஆரி, ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்ததோடு எச்சரித்தும் அனுப்பினார்!

புதுமுக இயக்குனரான சந்திரா தங்கராஜ் எழுதி, இயக்கி வரும் படம் கள்ளன். எழுத்தாளரான சந்திரா, டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர். ஸ்ரீ மாசாணியம்மன் பிக்சர்ஸ் பேனரில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்தில் கரு.பழனியப்பன், நித்தியா, மாயா, செளந்தர் ராஜன், நமோ நாராயணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் ஆரி கலந்து கொண்டார்! மேடையில் பேசிய ஆரி, முதலில் ப்ளூ சட்டை மாறனை பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டு திட்டி தீர்த்தார். பிறகு ஒரு கட்டத்தில் ப்ளூ சட்டை மாறனின் பெயரை சொல்லி விட்டார். சூசகமாக சொல்லவில்லை. அவரை தான் சொல்கிறேன். எச்சரிக்கிறேன். ப்ளூ சட்டை மாறன் எங்கு இருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டிய தருணம். பரோட்டா மாவு பிசைஞ்ச மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிக பெரிய வன்மம் என்றார் ஆரி.

அஜித் நடித்த வலிமை படத்தை மிக மோசமாக விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். படத்தை தாண்டி அஜித்தை உருவ கேலி செய்தும் விமர்சித்திருந்தார். இதனை பிரபலங்கள் பலரும் கண்டித்திருந்தனர். அஜித் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.