

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவரின் கலையுலக வாரிசுகளாக சூர்யா, கார்த்தி தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்..
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீசாகி செம வரவேற்பை பெற்று வருகிறது. கார்த்தியும் பொன்னியின் செல்வன், விருமன் படங்களை முடித்து விட்டு சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
இவர்களைப் போல் சிவக்குமாரின் மகளான பிருந்தா, பாடகியாக இருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு மிகவும் பிடித்த போட்டோ என தனது சகோதர்களுடன் எடுத்துக் கொண்ட சிறு வயது போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. சிவக்குமாருக்கு மூன்று மகன்களா என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.
அதோடு பிருந்தா பதிவிட்டுள்ள கேப்ஷனில், இது எனக்கு மிகவும் பிடித்த போட்டோ. எனக்கு எப்போதும் என சகோதரர்களை போல இருக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. அதனால் ஆண்கள் அணியும் உடையை அணிவேன். முடி வளர்க்க பிடிக்காது. ஏனெனில் என் சகோதரர்களிடம் இருந்து நான் வித்தியாசமாக தெரிய கூடாது என்பதற்காக. நான் கல்லூரி படிக்கும் வரை என் சூர்யாவின் சட்டையையும், கார்த்தியின் ஜீன்சையும் அணிவேன். அவர்களுடன் போட்டோவில் இருப்பது நான் தான் என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்; மேலும் அனைவரும் என்னை கார்த்திக்கு அக்காவா எனக் கேட்கிறார்கள்! இல்லை நான் தான் கடைக்குட்டி! இனிமேல் யாரும் அப்படி கேட்க வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதை சூர்யா, கார்த்தி, ராதிகா உள்ளிட்ட பிரபலங்கள் லைக் செய்துள்ளனர். கார்த்தி பதிவிட்டுள்ள கமெண்டில், இதில் உன்னை விட நான் தான் இளமையாக இருக்கிறேன். அதற்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டு கலாய்த்துள்ளார்.

