சரும பராமரிப்பு:
வேப்பிலை ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள். எனவே வேப்பிலையை அரைத்து, அத்துடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால், எளிதில் கரும்புள்ளிகள் போய்விடும். ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அழகு குறிப்புகள்
