
ரோஸ் ஃபேஸ்வாஷ் பவுடர்:
வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகள் போகும். இயற்கையாகவே சருமம் பளிச்சிடும். சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். இயற்கையான க்ளோ கிடைக்கும். தாய்மார்கள், கர்ப்பிணிகள், பிறந்த குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம்.
தேவையானவை:
ஓட்ஸ் – அரை கப், உலர்ந்த ரோஜா இதழ்கள் – அரை கப், பாதாம் – 8
செய்முறை:
இதையெல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராக்கி கண்ணாடி ஜாரில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். தேவையான அளவு எடுத்து தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி, நன்கு தேய்த்துக் குளிக்கலாம். இதையே ஃபேஸ் பேக்காக போட்டு கொண்டு 20 நிமிடம் கழித்து கழுவி விடலாம்.
