
டோலிவுட்டில் பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக பிரஸ் மீட் நிகழ்ச்சி ஒன்று இன்று எந்தவொரு அறிவிப்பும் இன்றி நடைபெற்றது. அதில், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் தில் ராஜு இந்த பிரஸ் மீட் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை பூஜா ஹெக்டே விஜய்யை நான் ரொம்பவே மிஸ் பண்றேன் என சொன்னதும், ஏகப்பட்ட குரல்கள் கிளம்ப, சற்று உஷாராகி இங்கே உள்ள அனைவரும் மிஸ் பண்றோம்னு மாற்றி பேசினார். இயக்குநர் நெல்சன் பற்றி பேசிய பூஜா அவர் வேறமாறி இயக்குநர் எனக் கூறினார். அதே போல அனிருத்தின் தீவிர ஃபேன் நான் என பேசிய பூஜா ஹெக்டே, இருவரையும் மேடைக்கு அழைத்து அரபிக் குத்து பாடலுக்கு நடனமாட சொன்னார். நெல்சன் சற்று தயங்கிய படி ஆடாமல் நிற்க, அனிருத் பூஜா ஹெக்டேவுடன் இணைந்து சில ஸ்டெப்களை போட்டார்.
