முதலில் இந்த செம்பருத்திப் பூவை எடுத்து, அதன் காம்பு பகுதி மற்றும் மகரந்த பகுதியை மட்டும் நீக்கி விட்டு, அதன் இதழ்களை தனியாக பிரித்து எடுத்து, தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது இந்த பாத்திரத்தை வைத்து, தண்ணீரை கொதிக்க விட வேண்டும் அதில் இரண்டு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள செம்பருத்தி இதழை இதில் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் ஒரே நிமிடத்தில் இந்த செம்பருத்திப் பூ தண்ணீரின் சூட்டில் சுருங்கி, அதன் நிறம் வெண்மையாக மாறி விடும். பிறகு அடுப்பை அனைத்துவிட வேண்டும். அதன்பின் இந்த டீயை வடிகட்டி, அதனுடன் அரை ஸ்பூன் எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான செம்பருத்தி டீ தயாராகிவிட்டது. இதனை தொடர்ந்தும் குடிக்கலாம், அல்லது வாரத்திற்கு மூன்று முறை மட்டும் குடிக்கலாம். இது உடம்பிற்கு அவ்வளவு நல்லது. உங்கள் அழகையும், இளமையையும் தக்க வைக்க உதவும்.