• Tue. Mar 19th, 2024

உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Byகுமார்

Sep 29, 2022

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக நெஞ்சார நடந்துக்குவோம் என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக நெஞ்சார நடந்துக்குவோம் என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக அப்போலோ மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை பெற்று பலன் அடைந்த நபர்கள் கலந்து கொண்டனர் மேலும் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர் . இந்த விழிப்புணர்வு பேரணியில் இருதய நோய்க்கான காரணிகள் அதை முன்கூட்டி தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை மருத்துவமனையை சேர்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் Dr. ஸ்ரீதர் மற்றும் இருதயவியல் துறை மருத்துவகுழு மூத்த மருத்துவர் Dr. விவேக் போஸ் Dr. சுப்பு ராமகிருஷ்ணன் Dr. கருப்பையா Dr. செந்தில் குமார் மற்றும் Dr. மணிகண்டன் மற்றும் அவசர சிகிச்சை துறையின் மருத்துவர் Dr. ஜூடு வினோத் Dr. மதன் ராஜா ஆகியோர் வழங்கினர் .
மேலும் சிகிச்சை பயனாளர்கள் தங்களது சிகிச்சை பலனின் அனுபவத்தையும் மற்றும் அதை எதிர்கொள்வதற்கான நடைமுறைகளையும் பகிர்ந்துகொண்டனர் . இந்நிகழ்ச்சியின் போது மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலகண்டன் , மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாக பொது மேலாளர் நிக்கில் திவாரி உடனிருந்தனர் ” நெஞ்சார நடந்துக்குவோம் என்பது இருதய நோய்க்கு மட்டுமல்லாமல் நம் வாழ்வியல் முறையிலும் மற்றும் நெஞ்சார்ந்தவர்களுக்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும் இறுதியாக Dr. மீனாட்சி சுந்தரம்- மூளை நரம்பியல் துறை , நிறைவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *