• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை அருகே ஹிரோஷிமா நாகசாகி தினம் குறித்து விழிப்புணர்வு..,

Byமுகமதி

Aug 7, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் வடகாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவரங்குளம் வட்டாரக்கிளையும் புதுக்கோட்டை குழந்தைகள் நலக் குழுமமும் இணைந்து நடத்திய ஹிரோசிமா – நாகசாகி அனுசரிப்பு தினம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு.ஜோசலி தலைமையேற்றார்.
ஆசிரியை ஆதிலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.

குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமிகு. மெய்யம்மாள்
சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் தடுப்புப் பிரிவுக் காவல் உதவி ஆய்வாளர் திருமிகு பென்னரசி, முன்னாள் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் திருமிகு சாமிநாதன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனநலம் மீளாய்வு மன்ற உறுப்பினர் சிவ.ஆனந்தன், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் வடகாடு தாய்த்தமிழ் ராஜா, அறிவொளி கருப்பையா,
ஆசிரியர் தியாகு ஆகியோர் கருத்துரையாற்றினார்கள்.

முன்னாள், குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் க. சதாசிவம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிறைவாக பள்ளி ஆசிரியர் சந்திரபோஸ் நன்றி கூறினார்.

நிகழ்வின் முடிவில் நடைபெற்ற நிகழ்வு குறித்து மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் சொன்ன மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.