• Wed. Mar 29th, 2023

“பள்ளி பருவத்தில் அரசு தேர்வு குறித்த விழிப்புணர்வு அவசியம் “-கல்வியாளர் ஷிபானா

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அரசு தேர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இளம் கல்வியாளர் ஷிபானா களமிறங்கியுள்ளார். பள்ளிகளில் இவர் பேசும் பேச்சுக்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது இப்பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் “ட்ரெண்டிங் ” ஆகி வருகிறது.

நீலகிரி மாவட்டம் போட்டி தேர்வுகளில் பின்தங்கியே உள்ளது. காரணம் கடந்த ஆண்டுகளில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே ஐஏஎஸ்கள் தேர்வாகியுள்ளனர்.நீலகிரி 40%சுற்றுலா மாவட்டம் என்பதால், நீலகிரியில் சுற்றுலா மீதுதான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.மேலும் இங்கு கான்வென்ட் பள்ளிகளுக்கு (Convent) பெயர் பெற்றது நீலகிரி. தங்கள் குழந்தைகளை, இங்கு சேர்ப்பதை பெற்றோர் கவுரவமாக கருதுகின்றனர்.இம்மாவட்டத்தில், வெளியூர் மாணவர்களே, பெரும்பாலும் கான்வென்ட்களில் படிக்கின்றனர். உள்ளூர் மாணவர்களுக்கு கல்விச் சேவை அளிப்பது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளே.

அரசுப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தினர்கூட வெற்றி பெறுவதில்லை. கடந்தாண்டுகளில் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 772 பேரில், 456 பேர் எழுதவில்லை. குரூப் – 2 தேர்வுக்கு 2,752 விண்ணப்பதாரர்களில் 872 பேர் எழுதவில்லை. குரூப் – 4 தேர்வுக்கு 5008 பேரில் 960 பேர் தேர்வு எழுதவில்லை. குடிமைப் பணி எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வில், கடந்த 40 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் இருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்னர், அதிகரட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரதேவன் ஐஏஎஸ்-ஆக தேர்ச்சி பெற்றார். 20 ஆண்டுகளுக்கு முன்னர், சிவகாமி சுந்தரி என்ற பெண் ஐபிஎஸ்-ஆக தேர்வு பெற்றார்.நீண்ட காலத்துக்குப் பின்னர், கடந்த ஆண்டு பந்தலூரைச் சேர்ந்த கே.இன்பசேகர், ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று, தற்போது கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையில் கூடுதல் ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளார்.இதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லை.

இந்நிலையில் சென்னையில் ஐ.ஏ.எஸ்., அகாடமி நடத்தி வரும் ஷிபானா தனது சொந்த மாவட்ட மான நீலகிரி மாவட்ட மாணவ மாணவிகளிடம் போட்டி தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இது குறித்து கூடலூர் ரோட்டரி சங்கம் சார்பில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஷிபானா பேசுகையில், பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் ஆகிய இரு வாய்ப்புகள் குறித்து மட்டுமே தெரிவிக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை சுற்றுலா மாவட்டமாக மட்டுமே கருதாமல், இங்குள்ள மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தினால், அவர்கள் அடுத்த கட்டத்துக்கு மாவட்டத்தை கொண்டு செல்வார்கள் என்பதே கல்வியாளர்கள் கருத்தாகும். “பொதுவாக அரசு தேர்வுக்கு தயாராகும் போது பள்ளியில் படிக்கும் போதே தயாராவர்கள், பெற்றோர்கள் ஏற்கனவே அப்பணிகளில் இருந்தால் அவர்களுக்கு எந்த பாடத்தை எடுத்து படித்தால் எந்த பணிக்கு செல்ல முடியும் என தெரியும்.பள்ளி காலத்திலேயே தயார்படுத்தபட வேண்டும் அது நீலகிரியில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலும் இல்லை.

பள்ளியில் ப்ளூ பிரிண்ட், கட்-ஆப், போன்ற விஷயங்கள் பெரும்பாலான ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவதில்லை. சிறு வயதிலேயே சில மாணக்கர்கள் நான் இந்த பணிக்கு தான் செல்வேன் என்ற எண்ண ஓட்டத்தோடு இருப்பார்களை அவர்களை அதற்கேற்றார் போல் இயக்குவது நம் கடமை எல்லோரும் பொறியியல் சார்ந்த படிப்புகளை மட்டுமே தேடி ஓடுவதை தவிர்க்க வேண்டும்

நீலகிரி மாவட்டத்தில் பல ஆண்டுகள் கழித்து 2020-ல் 20 ஆண்டுகள் கழித்து UPSC தேர்வெழுதி சாதாரண தோட்ட தொழிலாளியின் மகள் மல்லிகா 26வது வயதில் நான்காவது அட்டம்ட்டில் கிரேக் பண்ணியுள்ளார்.மேலும் நீலகிரி மாவட்டத்தில், எஸ்.சி., எஸ்.டி.,பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களுக்கு UPSC, TNPSC யில் ரிசர்வேசன் உள்ளது பொது பிரிவினர் 90 மார்க் வாங்க வேண்டும் என்றால் எஸ்.டி., பிரிவினர் 70 மார்க் வாங்கினால் போதும் பழங்குடியின மாணவர்கள் பலருக்கும் இது தெரியாது இவையெல்லாம் தெரிய படித்தினால் அவர்களின் தலைமுறை உயரக்கூடும். தற்போது நீலகிரி மாவட்ட மக்களிடையே போட்டி தேர்வுகள் குறித்து எடுத்து சொல்லி விழிப்புணர்வை ஏற்படும் முயற்சியில் இறங்கியுள்ளேன்” என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *