மகேந்திரனின் முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் விஞ்ச் ஆப்ரேட்டராக பணியாற்றிய தற்போது கெத்தை விஞ்ச் லைன் மலரும் நினைவுகளுடன் காட்சியளிக்கிறது.
முன்பெல்லாம் சினிமாக்களில் பாடல் காட்சிகளில் மட்டுமன்றி பல்வேறு காட்சிகளிலும், ஊட்டி தாவரவியல் பூங்கா படகு இல்லம், சூட்டிங் மட்டம்,குன்னுார் லேம்ஸ்ராக் காட்சி முனைகள் கட்டாயம் பதிவாகியிருக்கும், ஆனால் சற்று மாறுபட்டு இயக்குநர் பாலுமகேந்திரா நீலகிரி மாவட்ட கிராமங்களை நோக்கி நகர்ந்தார்.

அதற்க்கு முதற்சான்று மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் மஞ்சூரை அடுத்த கெத்தை கிராமம் மின்வாரிய முகாம் பகுதியை அடக்கிய இந்த இடத்தில் குந்தா மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் நிலையம் அமைந்துள்ளது.
அந்த காலகட்டத்தில் கெத்தை மின் நிலையத்தில் இருந்து அருகாமையில் இருந்த கடை வீதிகளுக்கு செல்லவும் அன்றாடம் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்லவும் கெத்தை மின் நிலையத்தில் இருந்து விஞ்ச் லைன் மூலம் பெனிஸ் டாக் பகுதி வரை இயக்கபட்டது அங்கிருந்து மஞ்சூர் பஜாருக்கு சென்று வணிகம் செய்து வாழ்ந்து வந்தனர். 80களில் உருவான மகேந்திரனின் தயாரிப்பில் உருவான தமிழ் திரைப்படமான முள்ளும் மலரும் திரைப்படம் இங்கு படமாக்கபட்டது.
முள்ளும் மலரும் கதைக்களத்தில் ரஜினி காந்த் மின் வாரிய விஞ்ச் ஆப்ரேட்டராகவும், சரத்பாபு கெத்தை மின் வாரிய பொறியாளராகவும் நடித்திருப்பார்கள்.

முள்ளும் மலரும் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன பிறகு பெனி்ஸ்டாக்–கெத்தை விஞ்ச் லைன் மிகவும் புகழ்பெற்றதுடன் அதற்கான மவுசும் கூடியது.
நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கெத்தை பகுதிக்கு வந்து இந்த விஞ்ச்சில் பயணிக்கவும் புகைப்படம் எடுத்துகொள்ளவும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
ஆனால் காலப்போக்கில் கெத்தையிலிருந்து பெனிஸ்டாக் பகுதிக்கு மின் வாரிய அலுவல் ரீதியான பரிவர்த்தனைகள் நிறுத்தபட்டதால் முற்றிலுமாக விஞ்ச் பயணம் நிறுத்தபட்டது.
இன்று முள்ளும் மலரும் விஞ்ச் தற்போது அந்த வழியே கடந்து செல்லும் பெரும்பாலோனோருக்கு மலரும் நினைவுகளாக மனதை நெருடுகிறது.