குறள் 351:
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. பொருள் (மு.வ): மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லைஉண்மை எப்போதும் தூங்குவதுமில்லை இன்பத்திலும், துன்பத்திலும் நீங்கள்நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை…‘இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை’ இருட்டில் இருக்கிறாய் என்று கவலைப்படாதே!இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது! நீங்கள் உடைந்து…
குறள் 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. பொருள் (மு.வ): பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய். நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை ஞானம் என்று சொல்லுவது பிழை. தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள்.தியானத்தால் மனதில் துணிவும் ஆற்றலும் உண்டாகும். பிறர் நம்மை தாழ்வாக கருதவோ,…
குறள் 349
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும். பொருள் (மு.வ): இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால்நன்மை உண்டாகும். சொல்லுக்கு மகத்துவம் இல்லை.அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போதுசக்தி படைத்ததாகி விடும். உடம்பு வியர்க்க வியர்க்கஉழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம்.நோய்…
குறள் 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர். பொருள் (மு.வ):முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.




