• Sat. Apr 20th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 28, 2022

சிந்தனைத்துளிகள்

 பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை
உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை

 இன்பத்திலும், துன்பத்திலும் நீங்கள்
நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஓர் உண்மை…
‘இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை’

 இருட்டில் இருக்கிறாய் என்று கவலைப்படாதே!
இருளும் விடியலை நோக்கித்தான் செல்கிறது!

 நீங்கள் உடைந்து போன அந்த நிமிடங்களே
உங்களை உருவாக்கிய நிமிடங்கள்..!

 நன்றாக பழகும் அனைவரும் நண்பர்கள் இல்லையென்ற
சிறு தெளிவு இருந்தால் போதும்
சில துரோகங்களையும், பல ஏமாற்றங்களையும் தவிர்க்கலாம்.

 கடந்த காலம் என்னும் சிறையில்
நீங்கள் உங்களை அடைத்துக் கொள்ளாதீர்கள்…
எதிர்காலம் என்னும் விடியலை நோக்கிப் புறப்படுங்கள்!

 வெளிச்சத்தை அடைய வேண்டுமெனில்
இருளில்தான் பயணித்தாக வேண்டும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *