


சிந்தனைத்துளிகள்
மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,
வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.

அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால்
நன்மை உண்டாகும்.
சொல்லுக்கு மகத்துவம் இல்லை.
அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போது
சக்தி படைத்ததாகி விடும்.
உடம்பு வியர்க்க வியர்க்க
உழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம்.
நோய் அனைத்தும் பறந்தோடும்.
உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து கடமை ஆற்றினால்
சோம்பல் சாம்பலாகி விடும்.
உழைப்பில் மனதை செலுத்தினால்,
எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம்.
அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு.
மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது.

