மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் பணியின் போது தரகர்கள் மூலம் லஞ்சம் வாங்குவது குறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .
அதனை தொடர்ந்து இன்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறையினர்
திடீர் சோதனை மேற்கொண்டனர் .

அதனைத் தொடர்ந்து பண பரிவர்த்தனைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது உறுதி செய்யப்பட்டது.
தரகர் கனி என்பவரிடம் 60 ஆயிரத்து 200 மற்றும் தரகர் மாரிஸ் குமார் 29 ஆயிரம் , தங்கதுரை 13 ஆயிரத்து 500, மற்றும் சரோஜா என்பவரிடம் 2000 முத்துக்குமார் என்பவரிடம் 500 மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் என்பவரிடம் 1500 இயக்குனர் சிவசுப்பிரமணியனிடம் 3500 மற்றும் உரிமை கோரப்படாத பணம் 19 ,800 உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது .

மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஆய்வாளர் , இயக்குனர் (ஒளிப்பதிவாளர்)உள்பட பல்வேறு நபர்களிடம் சுமார் ரூபாய் 2 லட்சம் அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.




