• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

முத்துராணி

  • Home
  • ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கிய அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்..,

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கிய அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்..,

தமிழகத்தில் முதல் ப்ரத்யேகமான முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையத்திற்கான சான்றிதழ் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைநோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கியதால், அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அங்கீகாரம் வழங்கியது. உலக அளவில், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்ற, அமேரிக்கன்…

செல்வப்பெருந்தகை நீக்கம்; மாணிக்கம் தாகூர் நியமனம்..,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து செல்வப்பெருந்தகை நீக்கம் – புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன் தொடர்ச்சியாக திமுகவுக்கும் திமுக கூட்டணிக்கும் எதிராக பேசி வந்தவர் மாணிக்கம் தாகூர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு..,

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப்…

கோவையில் லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டியின் உயர்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

பஞ்சாபின் புகழ்பெற்ற லவ்லி புரொஃபெஷனல் யுனிவர்சிட்டி (LPU) சார்பாக மாணவர்களுக்கான உயர்கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இரண்டாவது பதிப்பாக நடைபெறும் இதில் கோவை மட்டுமின்றி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான…

இயக்குநர் பாக்யராஜ் காலமானார்..!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக காலமானார். இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

என்னது ஒரு கிராம் தங்கம் 21 ஆயிரத்தை தாண்டுமா!!

அடுத்த சில மாதங்களில் 1 கிராம் தங்கத்தின் விலை சுமார் ரூ.21,000-த்தை தாண்டும் என அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது. அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை 40% வரை உயரக்கூடும் என JPMORGAN CHASES GLOBAL RESEARCH அறிக்கை வெளியாகி…

ஆர்டிஓ அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை…

தமிழகத்தின் பல்வேறு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 30-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பத்திர பதிவு அலுவலகங்களில் சோதனை…

சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை..,

சென்னை எம் ஆர் சி நகரில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் எஸ்.பி.வேலுமணி மீண்டும் ஆலோசனை எனத் தகவல் வெளியாகி உள்ளது. சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் அதிமுக பொதுச் செயலாளர்…

என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்..,

என் மகனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மட்டுமே, அவர் அரசியலுக்கு வரமாட்டார்.என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

3 நாட்கள் சட்டசபை நடைபெறும்! ஜெ சி டி பிரபாகரன்..,

3 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஜே சி டி பிரபாகரன் தெரிவித்து இருக்கிறார். ஜூன் 23ம் தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். வெள்ளி, திங்கள், செவ்வாய் என 3 நாட்களும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்…