சிவகாசி அருகே ஆலங்குளம் ஊராட்சி கொங்கன்குளம் கிராமத்தில் கருப்பசாமி என்ற இளைஞர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.

சுமார் 2000க்கும் மேற்பட்ட கோழிகளை தனது பண்ணையில் வளர்த்து வரும் நிலையில் இப்பகுதியில் நிலவும் அறிவிக்கப்பட்டாத மின் வெட்டு காரணமாக கோழிப்பண்ணையில் உள்ள மின் விசிறி, மற்றும் தண்ணீர் தெளிக்கும் மின் மோட்டாரை இயக்க முடியாத நிலையில் கடும் வெப்பம் தாங்க முடியாமல் 1000க்கும் மேற்பட்ட கோழிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் கோழிப்பண்ணை உரிமையாளர் கருப்பசாமி அறிவிப்பில்லா மின்வெட்டு காரணமாகவே கோழிகள் அனைத்தும் உயிரிழந்துள்ளதாகவும்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதிலளிக்காமல் அலட்சியத்துடன் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அறிவிப்பில்லா மின்வெட்டின் காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டிற்கு அரசே நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.








