• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முத்துகுமார்

  • Home
  • பொள்ளாச்சியில் காலில் காயம்பட்ட யானை..,
    உணவு கிடைக்காமல் தவிக்கும் பரிதாபம்..!

பொள்ளாச்சியில் காலில் காயம்பட்ட யானை..,
உணவு கிடைக்காமல் தவிக்கும் பரிதாபம்..!

பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருவது பரிதாபத்துக்குரியதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள்…

சிறப்பாக செயல்பட்ட பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு பரிசு..!

பொள்ளாச்சி காவல் நிலையம் சிறந்த உட்கோட்டத்துக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பரிசு கோப்பை வழங்கி கௌரவித்தார்.பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம்,கோமங்கலம் காவல் நிலையம், மகாலிங்கபுரம்…

ஆனைமலையில் சந்தன மரம் வெட்டிய ஐவர் கைது!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம், டாப்சிலிப், மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி…

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில்..,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்தநாள் விழா அனுசரிப்பு..!

வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாள் விழா மலர் தூவி மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டது.வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அர்த்தனாரி பாளையம், அங்கலக்குறிச்சி கைகாட்டி, குமரன் கட்டம் பகுதியில் அஇஅதிமுகபொதுச்…

31 வார்டுகளில் வெற்றி; பொள்ளாச்சி நகராட்சியை கைப்பற்றியது திமுக!

தமிழகத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளான இன்று பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.…

குடிநீர் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் மண்டபம் தனியார் குடியிருப்பில் தினேஷ் வசித்து வருகிறார். இவர் மாசாணி அம்மன் கோவில் தேங்காய் பழம் விற்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் 15 குடியிருப்புகள் உள்ளது. இதில்…

பொள்ளாச்சியில் வாக்கு எண்ணும் மையத்தில் தீவிர பாதுகாப்பு!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் கோட்டூர், ஆனைமலை, உடுமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுளேஸ்வரன்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி,சமத்தூர்,வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏழு பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குப்பதிவு…

பொள்ளாச்சியில் பேருந்து வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்..!

பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் பயணிகளுக்கு போதிய பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் வால்பாறையில் இருந்து வெளியூர் சென்று வசிக்கும் பொதுமக்கள் பொள்ளாச்சி புதிய பேருந்து…

பொள்ளாட்சியில் ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்..!

பொள்ளாச்சி மற்றும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவது அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.பொள்ளாச்சியில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். பொள்ளாச்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில்…

ஆனைமலையில் கோலாகலமாக நடைபெற்ற குண்டம் திருவிழா!

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடைபெற்ற குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. குண்டம் திருவிழாவின் ஒரு பகுதியான மயான பூஜை கடந்த 14ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு மேல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 16ம் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் சித்திரத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு மேல் குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் இன்று காலை சுமார் 9 மணியளவில் தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன்,  புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் ஆகியோரைத் தொடர்ந்து பக்தர்கள் ஒவ்வொருவராக குண்டம் இறங்கினர். கொடியேற்றம் நாளில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து வேண்டுதலை நிறைவேற்றினர். குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டனர்.  குண்டம் திருவிழாவுக்கென அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வால்பாறை சரக போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்ன காமணன், பரமேஸ்வரன், செல்வராஜ், கார்த்தி ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார்,  தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பெண் போலீசார்,  போக்குவரத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (18ம் தேதி)  கொடி இறக்குதல்,  மஞ்சள் நீராடல்,  மகா முனி பூஜை  ஆகிய…