

தமிழகத்தில் ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து பொள்ளாச்சியில் 36 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நாளான இன்று பாலக்காடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆரம்பம் முதலே திமுகவினர் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 36 வார்டுகளில், 31 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து 3 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.


