பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் காலில் அடிபட்ட காட்டுயானை உணவு தேட செல்லமுடியாமல் தவித்து வருவது பரிதாபத்துக்குரியதாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் யானை, காட்டெருமை, மான், என பல்வேறு வகையான விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் அருகே உள்ள கிளாஸ் ஹவுஸ் பகுதியில் காட்டு யானை கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்கமுடியாமல் கடந்த ஐந்து நாட்களாக ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது. இதனால் அது தனக்குத் தேவையான உணவை தேட முடியாமல் தவித்து வருகிறது. இதுபற்றி யானை பாகன்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கூறியும் வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இதுவரை எந்த மருத்துவ சிகிச்சையும் கொடுக்காததால் உணவின்றி தவித்து வருகிறது. உடனடியாக வனத்துறை அதிகாரிகள் காலில் காயம்பட்டு தவித்து வரும் காட்டு யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சியில் காலில் காயம்பட்ட யானை..,
உணவு கிடைக்காமல் தவிக்கும் பரிதாபம்..!
