
பொள்ளாச்சி காவல் நிலையம் சிறந்த உட்கோட்டத்துக்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பரிசு கோப்பை வழங்கி கௌரவித்தார்.
பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம்,கோமங்கலம் காவல் நிலையம், மகாலிங்கபுரம் காவல்நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் என உள்ளன. காவல் நிலையங்களில் சிறப்பான முறையில் குற்றவழக்குகளைக் கையாண்டும், பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்துதீர்வு காண்பது என செயல்பட்டதற்கு கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணிக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
