உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்..
உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட morning consult என்ற அமைப்பு ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் எடுத்த ஆய்வு…
இன்றைய ராசி பலன்
மேஷம்-நன்மை ரிஷபம்-தனம் மிதுனம்-பயம் கடகம்-வெற்றி சிம்மம்-அசதி கன்னி-சாந்தம் துலாம்-சிக்கல் விருச்சிகம்-ஊக்கம் தனுசு-ஆதரவு மகரம்-உதவி கும்பம்-மறதி மீனம்-அமைதி
செஸ் ஒலிம்பியாட்டிற்கு அளித்த விடுமுறை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்…
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது . கிட்டத்தட்ட 12 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியானது…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்வி ரமணா பணி ஓய்வு பெற்றதை அடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையொட்டி…
ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை தரிசனம்… ஆன்லைனில் முன்பதிவு..
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பலர் மாலை போட்டு தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 7 முதல் 10ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதுபோல…
துபாய்க்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….
சென்னையிலிருந்து துபாய்க்கு இண்டிகோ விமானம் ஒன்று 160 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை 7.40 மணியளவில் புறப்பட இருந்தது. இந்நிலையில் துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக விமான கட்டுப்பாட்டு மையத்திற்கு போன்…
இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை
தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன்…
மகளிர் அரசியலுக்காக 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை தந்தவர் முதல்வர்- அமைச்சர் பொன்முடி
மகளிர் அரசியலையும், சமுதாய நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும் என்பதற்காக 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை தந்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெருமிதம். விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பாக பெண் ஊராட்சி…
திடீர் மழையால் வானில் வட்டமிட்ட விமானங்கள்..
சென்னையில் தற்போது திடீா் மழையால் விசாகப்பட்டிணத்திலிருந்து சென்னையில் தரையிறங்க வந்த விமானம்,பெங்களூருக்கு திரும்பி சென்றது.கொச்சி,மதுரை உள்ளிட்ட விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதியமும் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதை அடுத்து…
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பேச்சு..
புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். ரூ.2ஆயிரம் கோடி வேண்டும் என்றும் அதில் குறைந்தபட்சம் ரூ.800 கோடி வேண்டுமென நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும்…