• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் தெப்பக்குளம் தூர்வாரி சுகாதாரம் பாதுகாக்கப்படுமா?

ByKalamegam Viswanathan

Sep 6, 2026

திருப்பரங்குன்றம் ஜி எஸ் டி ரோட்டின் கீழ் பகுதியில் தெப்பக்குளம் அமைந்து உள்ளது.
இந்த குளத்தில் தான் ஆண்டுதோறும் தை மாதத்தில் தெப்பத் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 9-ம் நாள் தெப்ப முட்டு தள்ளுதல் நிகழ்ச்சியிலும், சிகர நிகழ்ச்சியானதிருவிழாவின் 10-வது நாளான தெப்ப உற்சவத்திலும் தெய்வானை அம்பாளுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளுவார்.. மேலும் காலையில் 3 முறை தெப்பக்குளத்திற்குள் வலம் வருவார்கள். இதே போல இரவில் மின்னொளியில் வான வேடிக்கையுடன் தெப்பத் திருவிழாகோலாகலமாக நடைபெறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள்.கடந்த காலங்களில் தெப்பத்திருவிழாவிற்கு என்று வைகை தண்ணீர் நிரப்படும்.

அதாவது நிலையூர் கண்மாய்க்குநிலையூர்கால் வாயிலில் பாசனத்திற்காக திறக்ககூடிய வைகை தண்ணீரை செட்டிக்குளம் மற்றும் திருப்பரங்குன்றம் பை–பாஸ் ரோட்டின் கீழ்புறத்தில் உள்ள கால்வாய் வழியாக தெப்பக்குளத்திறகு கொண்டு வந்து நிரப்புவது நடைமுறையில் இருந்து வந்தது ஆனால் தாமரை மற்றும் செடி,கொடிகள் படர்ந்து செட்டிக்குளமானது புதராக உருமாறியதாலும், பை-பாஸ் ரோட்டில்வைகை தண்ணீர் கொண்டுவரக் கூடிய கால்வாய் பகுதியானது ஆக்கிரமிப்புகளால் அடைப்பட்டு போனதாலும் தெப்பகுளத்திற்கு வைகை தண்ணீர் கொண்டு வராத நிலையாக இருந்து வருகிறது.

சில மாதங்கள் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்திலும், தெப்பக்குளம் வளாகத்தில் போடப்பட்ட ஆழ்துளை கிணற்றின் (போர்வெல் ) மூலம் கிடைக்கும் தண்ணீரால் மட்டுமே தெப்பக்குளத்தை நிரப்புவதில் ஆண்டுதோறும் தை மாதத்தில் போதும் போதுமென்று நிலையாக இருந்து வருகிறது. தெப்பக்குளம் வளாகத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீரை தெப்பக்குளத்திற்குள் நிரம்புவதற்காக பல மணி நேரம் தொடர்ந்துமின் மோட்டாரை பயன்படுத்தும் பட்சத்தில் மின்கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் நிலையாகவும் உள்ளது

தெப்பத்தில் தண்ணீரை நிரப்பி திருவிழா கொண்டாடப்பட்ட பிறகு அடுத்த திருவிழா வரும் வரை தெப்பகுளத்தை கோவில் நிர்வாகம் திரும்பி கூட பார்க்காத நிலை தான் தற்போது வரை தொடர்கிறது. அதனால் தெப்பக்குளமானது அசுத்தங்களின் பிறப்பிடமாக உருமாறி சுகாதாரம் கேள்விகுறியாகி இருந்துவந்தது அதே சமயம் தெப்பக்குளத்தில் ஒரளவிற்கு அசுத்தமாக தண்ணீர் கிடந்து வந்தது அது பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது. இந்த நிலையில்தற்போது வறண்டு பாலைவனமாக மாறி வருகிறது.

இந்த சமயத்தில் தெப்பக்குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, தண்ணீரை நிரப்ப வேண்டும் மேலும் சுத்தம் சுகாதாரம் பேணிகாக்கப்பட வேண்டும் மீன் குஞ்சுகள் விட்டு முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காக பகல் இரவு காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும் இதன் மூலம்பட்சத்தில் தெப்பக்குளம் சுகாதாரம் பேணி காக்கப்படலாம். இதற்குகோவில் நிர்வாகம் முன்வருமா? என்று பக்தர்கள் சமூக ஆர்வலர்கள் எதிர் பார்க்கிறார்கள்.