

புதுச்சேரி சட்டப்பேரவையில் மத்திய அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ரூ.2ஆயிரம் கோடி வேண்டும் என்றும் அதில் குறைந்தபட்சம் ரூ.800 கோடி வேண்டுமென நிதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், மாநில அந்தஸ்து பெற அனைத்து கட்சியினரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கடன் தொகை ரூ.10 ஆயிரம் கோடி அளவில் உயர்ந்துள்ளது. அசல் வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தி, அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். இவை அனைத்திற்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக முதல்வர் ரங்கசாமி பேரவையில் பேச்சு.
