நேற்று இரவு 9 மணி அளவில் மதுரையில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து நாகமலை புதுக்கோட்டை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் ஒரு மான் விபத்துக்குள்ளாகி துடிதுடித்துக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து அரசு பேருந்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் நடத்துனர் மானை எடுத்து சாலை ஓரத்தில் வைத்தனர்.

சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இடது பக்க கொம்பு சேதம் அடைந்து தலையில் பலத்த காயமடைந்து மான் உயிருக்கு போராடியது. இதனைத் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறையினர் இறந்த மானை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கொண்டு சென்றனர். இறந்த புள்ளிமான் 4 வயது மதிக்கத்தக்கது என்றும் ஆண் மான் எனவும் வனத்துறையினர் கூறினர்.
கால்நடை மருத்துவர்களின் உடற் கூறு ஆய்விற்கு பின் மான் வனத்துறை பகுதிகளில் பாதுகாப்பாக புதைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.








