• Sun. Dec 3rd, 2023

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை தரிசனம்… ஆன்லைனில் முன்பதிவு..

Byகாயத்ரி

Aug 27, 2022

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பலர் மாலை போட்டு தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 7 முதல் 10ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதுபோல புரட்டாசி மாத பூஜைகள் செப்டம்பர் 16ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த குறிப்பிட்ட நாட்களில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு பம்பையில் உடனடி முன்பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *