சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது . கிட்டத்தட்ட 12 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியானது ஆகஸ்ட் 9ம் தேதி நிறைவு பெற்றது. இந்தியாவின் முதல் முறையாக சென்னையில் போட்டி நடைபெற்றதால் தமிழக அரசு இதை கோலாலமாக கொண்டாடியது என்று சொல்லலாம் . இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதை ஈடு செய்யும் வகையில் வேலை நாட்களாக 27ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அதை ஈடு செய்யும் வகையில் இன்று கல்வி நிறுவனங்கள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.