

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் 65 வது படமாக உருவாகி உள்ள பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, அபர்னா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் டைட்டிலுடன் ஜுலை மாதம் வெளியிடப்பட்டன..
பீஸ்ட் படத்தின் 100 வது நாள் ஷுட்டிங் போட்டோ வெளியானதில் இருந்தே படம் பற்றி அப்டேட் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள். ஆனால் எந்த அப்டேட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதாக தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் சமயங்களில் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவின. ஆனால் அப்படி எதுவும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும் விடாமல் அப்டேட் கேட்டு #BeastUpdate ஹேஷ்டேக்கை ரசிகர்கள் அவ்வப்போது டிரெண்டிங் ஆக்கி வந்தனர்.
இந்நிலையில் இன்று, விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்பட உள்ளதாக ஸ்பெஷல் வீடியோவுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது!
அதன்படி, மாலை 6 மணிக்கு வெளியானது! “அராபிக் குத்து” பாடலின் ப்ரோமோ!
நெல்சன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் டிஸ்கஷன் மோடில் இருப்பதுபோலும், விஜய் போனில் பேசுவது போலும் பாடல் ப்ரோமோ உள்ளது! கம்ப்ளீட் கலாய்ப்பு மோடில் உள்ள பாடல் ப்ரோமோ தான் இணையத்தின் தற்போதைய ட்ரெண்ட்!
சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில், அனிருத் இசையமைக்க உள்ள “அராபிக் குத்து” பாடலை ஆர்வமாக எதிர்பாத்துக்கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்!