• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் – ஓபிஎஸ் பேட்டி

ByKalamegam Viswanathan

Feb 18, 2024

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

மேகதாது விவகாரம் குறித்த கேள்விக்கு..,

தமிழக அரசு அனுமதி இல்லாமல் மேகதாதுவில் கர்நாடகா அரசு எந்த அணையும் கட்ட முடியாது.

கை மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவது குறித்த கேள்விக்கு..,

நீண்ட நாள் கோரிக்கை கட்சத்தீவை மீண்டும் பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசு இதனை கவனம் செலுத்த வேண்டும்.

சட்டமன்றத்தில் இருக்கை தொடர்பான கேள்விக்கு..,

சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் தொடர்பாக கேள்வி கேட்டதற்கு அவர்களாகவே தந்தார்கள், அவங்களாகவே எடுத்துக் கொண்டார்கள் எந்த வருத்தமும் கிடையாது.

பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு..,

தேசிய தலைவர்களை சந்திக்க சென்றால் உங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்வேன்.