

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றியத்தின் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமினை உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி ரத்த கொடையளித்து முகாமை துவக்கி வைத்த நிலையில் திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்தம் கொடையாக அளித்தனர்.
ஆர்வத்துடன் ரத்த கொடை அளிக்க வந்த திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் பாலமுரளி தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்த கொடையாளர்களிடமிருத்து ரத்தம் எடுத்துக் கொண்டனர்., தொடர்ந்து பொதுமக்களுக்கு ரத்த தானம் குறித்து விழிப்புணர்வும் அளித்தனர்.

