தேசியக்கொடிக்கு ஏழைகளிடமிருந்து ரூபாய் 20 கேட்பது வெட்கக் கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய கொடியை அனைவரும் கட்டாயமாக வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் இதற்காக ஏழை எளியவர்கள் இதிலிருந்து ரூபாய் 20 பறிக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின
இது குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டுப்பற்றை ஒருபோதும் விற்பனை செய்ய முடியாது என்றும் ரேஷன் பொருட்கள் கொடுப்பதற்கு பதிலாக தேசியக்கொடி என்ற பெயரில் ஏழைகளிடம் 20 ரூபாய் பறிப்பது மிகவும் வெட்கக் கேடானது என்றும் ஏழைகளின் சுயமரியாதையை பாஜக அரசு சீண்டிப் பார்க்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேசியக்கொடியை கட்டாயமாக வாங்க வேண்டும் என வலியுறுத்த கூடாது என்று கூறியுள்ளது.