• Wed. Dec 11th, 2024

கேட்டது மூன்று கொடுத்தது ஒன்று! – காங்கிரஸார் புலம்பல்!

Byதரணி

Mar 5, 2022

ஜெயங்கொண்டம் நகராட்சி 21 வார்டுகளிள் 16 வது வார்டில்.
மொத்த வாக்காளர்கள் 1657.
பதிவான வாக்குகள் 947. (57.15)
(திமுகவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளரான) சுந்தரா பாய் சுயேட்சை 430 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மலர்விழி அதிமுக 266,
இதயராணி காங்கிரஸ்198,
இந்திராகாந்தி பாமக 20,
ரோஷ்மா அமமுக 22,
விஜயலட்சுமி சுயேச்சை 11,
பெற்றனர்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு ஜெயங்கொண்டம் நகராட்சியில் 3 கேட்டு அனுமதித்த நிலையில். மாவட்ட திமுக சார்பில் ஒரு வார்டு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கூட்டணி தர்மத்தை மதித்து பெண்கள் வார்டான 16 வது வார்டில் போட்டியிட்டது காங்கிரஸ்.  பாரம்பரியமாக திமுகவைச் சேர்ந்த  ராபர்ட் ராஜசேகரன் தனது மனைவி சுந்தராபாய்யை களம் இறக்கினார். ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஒரே ஒரு  சுயேச்சையாக வெற்றியும் பெற்றார்.

அதிர்ச்சி அடைந்த காங்கிரஸார் தோல்விக்கு காரணத்தை ஆராய்ந்த போதுதான் தெரிய வந்தது திமுகவின் மறைமுக ஆதரவுடன் தான் களம் இறக்கப்பட்டதும். சுயேச்சைக்கு ஓட்டுப்போட  உள்ளடி வேலை செய்ததும். ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்ற அன்றே  இரவோடு இரவாக ஜெயங்கொண்டம் நகராட்சியில் வெற்றி பெற்ற திமுக விசிக போன்ற கூட்டணி கட்சிகளுடன் சுயேச்சையாக வெற்றி பெற்ற சுந்தரா பாய் தனது கணவர் ராபர்ட் ராஜசேகரனுடன் திமுக  பொறுப்பாளர்களுடன்  ஒன்றாக  அமைச்சரும் மாவட்ட செயலாளருமான சிவசங்கரை சந்தித்து ஆசி பெற்றது தெரிய வந்தது!

இதை அறிந்த காங்கிரசார் திமுகவை நம்பி தானே நிற்கிறோம். தற்போது முடிந்த சேர்மன் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்  மற்றும் துணைத் சேர்மன் நகராட்சி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கூட்டணி கட்சிகளை பின்னுக்குத்தள்ளி பதவியைக் கைப்பற்றிய திமுகவினர் மீது உடனடியாக நேற்று மாலையே முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது

அதேபோல் ஜெயங்கொண்டத்தில், நிற்க வைத்து முதுகில் குத்தி விட்டார்களே என்று புலம்பி கூட்டணி தர்மத்தை மீறி  தேசியக் கட்சியை அவமானப்படுத்திய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.