ராஜேந்திர சோழனின் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள அரண்மனை பகுதியான மாளிகை மேடு என்று அழைக்கப்படும் பகுதியில். இரண்டாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்ட அகழாய்வின்போது சோழர் காலத்து கட்டிடங்கள் இருந்ததற்கான சான்றாக பல்வேறு தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 10- க்கு 10 என்ற சதுர அடி அளவில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அரண்மனையின் சுற்று சுவர்கள் இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்றவைகள் கிடைத்துள்ளன.
மேலும், கை காப்பு போன்ற தங்கத்திலான காப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இதன் எடை சுமார் 7.920 கிராம் எடை கொண்ட இந்த காப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நீளம் 4.9 மி.மீட்டரும், அதன் நடுவில் அமைந்துள்ள தடிமனான பகுதியின் அளவு 4மி.மீட்டர் என்ற அளவில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளது. இந்த எலும்பு துண்டுகள் தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின்னரே இது மனிதர்களின் உடல் எலும்புகளா என ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த அகழ்வாராய்ச்சி பணியில் தொல்லியல் துறையைச் சேர்ந்த நந்தகுமார் தலைமையில் ஆய்வு மாணவர் திருச்செல்வன் உட்பட 12 தினக்கூலி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


