• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கலைஞர் — கலைஞர்- 100 விழா

Byஜெ.துரை

Dec 26, 2023

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து கலைஞர்-கலைஞர் 100 விழாவினை 6.1.2024 சனிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் நடத்த உள்ளது. இன்று (26.12.2023) மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை மெட்ராஸ் ரேஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.

துவக்க விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், இணை செயலாளர் சௌந்தர பாண்டியன், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, பேரரசு, லிங்குசாமி , நடிகர் சங்கம் சார்பில் பூச்சி முருகன், மற்றும் டி.ஜி. தியாகராஜன், கலைப்புலி எஸ்.தாணு, டி.சிவா, கே.ராஜன், சுவாமிநாதன் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்