• Wed. Apr 24th, 2024

நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆர்டெமிஸ் ராக்கெட் பயணம்

ByA.Tamilselvan

Sep 3, 2022

நிலவில் மனிதர்கிளை குடியேற்றவற்கான துவக்கமாக இன்று பயணமாகும் ஆர்டெமிஸ் ராக்கெட் திட்டம் இருக்கும்.
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு விண்ணில் ஆர்டெமிஸ் ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. விண்ணில் ராக்கெட் செலுத்துவதற்கு காலநிலை 60% சாதகமாகஇருப்பதால் நாளை விண்ணிக்கு ராக்கெட்டை ஏவுவதில் தாமதம் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில் அதாவது ஆகஸ்ட் 29ம்தேதி ஆர்டெமிஸ் ராக்கெட் செலுத்தப்பட இருந்தது. ஆனால் எரிபொருள்நிரப்புவதில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழிலநுட்ப கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டது. தொழில்நுட்பகோளாறு சரிசெய்யப்பட்டு இன்று நிலவுக்கு புறப்படுகிறது ஆர்டெமிஸ் ராக்கெட்
கடந்த 1969ம் ஆண்டு முதன்முதலாக நாசா விண்வெளியில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. இதற்கு அப்பல்லோ என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்தத்திட்டத்துக்கு ஆர்டெமிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. நாசா விண்ணுக்கு ஏவும் ஆர்டெமிஸ் ராக்கெட் ஏறக்குறைய 10 ஆண்டுகள் தீவீரமான முயற்சிக்குப்பின் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று சோதனை டம்மிகள்
ராக்கெட்டில் உள்ள ஓரியன் எனும் கேப்சூல் நிலவின் நீள்வட்டபாதையை அடைந்தவுடன் பிரிந்துவிடும். அடுத்த 37 நாட்கள் விண்வெளியில் இந்த கேப்சூல் சுற்றிவரும். அதாவது நிலவிலிருந்து 100 மைல் தொலைவில் சுற்றிவரும்.தற்போதைய பயணத்தில் மனிதர்கள் செல்லவில்லை . ஆனால் டம்மி மனிதர் அதாவது பொம்மைகள் செல்கின்றன.ஓரியன் காப்ஸ்யூலில் உள்ள பேலோடில் மூன்று சோதனை டம்மிகள் இருக்கும். ஆரஞ்சு நிற விமான உடையில் ஒரு டம்மி, அதிர்வு மற்றும் முடுக்கம் உணரிகளுடன் கமாண்டர் இருக்கையில் இடம் பெற்றிருக்கும். மனித திசுக்களைப் பிரதிபலிக்கும் பொருட்களால் செய்யப்பட்ட மற்ற இரண்டு டம்மிகளும் இதோடு அனுப்பப்படுகிறது.
இவை நிலவுக்கு செல்லும் மனித உடலில் உள்ள காசிம் கதிர்வீச்சை அளவிடும். மூன்று டம்மிகளைத் தவிர, ஓரியன் விண்கலம் சந்திரனுக்கு அருகில் வந்தவுடன் பத்து சிறிய செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தும்.
மேலும் நிலவில் செடிகளை பயிரிடும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவுக்கு செல்லும் போது அங்கு விவசாயம் செய்வதற்கான முன்னோடியாக இத்திட்டமும் உள்ளது.விதைகள், பூஞ்சைகள், ஈஸ்ட் மற்றும் பாசிகள் மீதான பரிசோதனைகள் அடங்கிய உயிரியல் பரிசோதனை ஐயும் இந்த ராக்கெட் எடுத்துச் செல்லும்.


நிலவில் ஆக்சிஜன் உள்ளது..
நிலவில் மனிதர்களை குடியேற்ற ஆய்வாளர்கள் முனைப்பு காட்டி வரும் நிலையில், அங்கு 800 கோடி மனிதர்கள் கிட்டத்தட்ட 1 லட்ச ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சந்திரனின் மேற்பரப்பில் சிலிக்கா, அலுமினியம், மேக்னிஷியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும் இந்த தாதுக்கள் அனைத்தும் ஆக்சிஜனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசாவின் கூற்றுப்படி ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை. அதன்படி பார்த்தால் நிலவில் உள்ள ஆக்சிஜன் மூலம் அங்கு மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு ஆகும்.
ஆர்டெமிஸ் ராக்கெட் பயணம் வெற்றி பெரும் பட்சத்தில் 2025ம் ஆண்டு நிலவுக்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் அதில் முதன்முதலாக ஒரு பெண் விண்வெளிஆய்வாளர் அனுப்பி வைக்கப்படஉள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *