

சூர்யாவுக்கு முருகன் வேடம் போட கூச்சப்பட்டார் என்று ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறியுள்ளார்.

சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் 10ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொண்வண்ணன், வினய், சிபி சக்கரவர்த்தி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்!
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள உள்ளம் உருகுதய்யா பாடலுக்கு சூர்யா போட்ட கெட்டப் குறித்து பலவிதமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, சூர்யாவுக்கு முருகன் கெட்டப் போடுவதில் உடன்பாடு இல்லை. முருகன் வேடம் போடனுமானு கேட்டார், ஆனால், இயக்குநர், ஹீரோயின் முருகன் பக்தர் என்பதால், அது நன்றாக இருக்கும் என்று இயக்குநர் விரும்பினார்.
இயக்குநர் விரும்பியதால் சூர்யா அந்த கெட்டப்பை போட்டார். ஆனால், கிளீன் ஷேவ் பண்ணிக்கொண்டு அந்த வேடத்தை போட்டபோது மிகவும் வெட்கப்பட்டார். சூர்யாவைத் தவிர மற்ற எந்த நடிகராக இருந்தாலும் அந்த வேடம் போட்டு இருக்க மாட்டார்கள் என்று ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறினார்.