உதகை A2B ஹோட்டலில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த ஊழியர்கள்
சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகையில் பல பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக் கூறி வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை பத்து ரூபாய் நாணயங்களுமே செல்லும் அவற்றை செல்லாது எனக் கூறுவதோ அதனை பண பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ, வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றம். இந்திய தண்டனை சட்டம் 124 Aவின்படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம் அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ஆனால் உதகையில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்த பவன் A2B ஹோட்டலில் டீ குடித்து விட்டு பத்து ரூபாய் நாணயங்கள் தரப்பட்டது.ஆனால் A2B ஹோட்டல் ஊழியர்கள் அதனை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரீதிடம் கேட்டபோது கடந்த 6 மாதங்களுக்கு முன்பே 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அறிக்கை விடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இந்த புகார் எழுத்துள்ளது. இது குறிக்கு பத்திரிக்கை செய்தி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.