மதுரையில் குமர காண சபா டிரஸ்ட் 27 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை விழாவில் கலைஞர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கு விழா நடைபெற்றது.
மதுரை தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் குமர காண சபா டிரஸ்ட் 27 ஆம் ஆண்டு புரட்டாசி மாத இசை விழாவில் மூன்றாவது வர நிகழ்ச்சியாக கலைஞர்களுக்கு பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மதுரை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் ஸ்ரீ சுபஸ்ரீ கலந்து கொண்டு தலைமை தாங்கினார். சரஸ்வதி கண் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் டாக்டர் பாஸ்கர்ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயத்தின் செயலாளர் வெங்கட் நாராயணன் கலந்து கொண்டார்.
இதில் மறைந்த சங்கீத வித்வான்கள் கலைமாமணி ராமநாதபுரம் சங்கரசிவம் மற்றும் மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ முருகபூபதி அவர்களின் நினைவாக ஸ்வரசங்கர லய பூபதி என்ற விருதினை மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயா வயலின் பேராசிரியர் நீடாமங்கலம் சுவாமிநாதனுக்கும் ஆலத்தூர் சீனிவாஸ் ஐயர் நினைவு விருதினை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயத்தின் முதல்வர் பொறுப்பு வித்வாம்ஷினி ருக்மணிக்கும்
மதுர கலாநிதி விருதினை மதுரை அரசு இசைக்கல்லூரி பரதநாட்டிய ஆசிரியர் சீதா பாலாவுக்கும் மதுர கலாச்சுடர் ஒளி என்ற விருதினை மதுரை அரசு இசைக்கல்லூரி வயலின் பேராசிரியர் பாலமுருகனுக்கும் குமர கானா இசை மணி என்ற விருதினை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் நாதஸ்வர வித்துவான் மதுரை வேல்முருகனுக்கும் கிராமிய கலை சுடர் ஒளி விருதினை சேது பொறியியல் கல்லூரி பயோ மெடிக்கல் பேராசிரியர் மலைச்சாமிக்கும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாட்டை குமரகான சபா டிரஸ்ட் தலைவர் சங்கீத கலாநிதி பக்தவச்சலம் செயலாளர் லக்ஷ்மண ராஜ் மற்றும் உறுப்பினர்கள் பேராசிரியர் முரளி கண்ணன் வழக்கறிஞர் ராமராஜ் பட்டிமன்ற பேச்சாளர் செந்தூரன் செய்திருந்தனர்.