• Wed. Dec 11th, 2024

சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்

ByA.Tamilselvan

Feb 12, 2023

மகாராஷ்டிரா, ஆந்திரா, அசாம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத்தலைவர் திரவுபதி மும்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மணிப்பூர் ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த நிர்வாகியான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம். அருணாச்சலப் பிரதேசம் மாநில ஆளுநராக திரிவிக்ராம் பர்னாயக் நியமனம். சிக்கிம் ஆளுநராக லட்சுமணன் பிரசாத் ஆச்சார்யா நியமனம். இமாச்சலப்பிரதேச ஆளுநராக பிரதாப் சுக்லா நியமனம். அசாம் மாநில ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமனம். ஆந்திர மாநில ஆளுநராக அப்துல் நசீர் நியமனம். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக பிஸ்வா பூஷன் ஹரிச்சந்திரன் நியமனம். மணிப்பூர் மாநில ஆளுநராக அனுசுயா நியமனம். மேகாலயா மாநில ஆளுநராக பகு சவுகான் நியமனம். பீகார் மாநில ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் நியமனம். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமனம். லடாக் மாநில ஆளுநராக மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.