• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மதுரை மண்டலத் தலைவர்இல்லத் திருமண விழா

ByKalamegam Viswanathan

Feb 12, 2023

மதுரையில் நடைபெற்ற தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மதுரை மண்டலத் தலைவர் டி.சண்முகம் இல்லத் திருமண விழாவில், மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சண்முகம் – தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகள் தெய்வ அபிராமிக்கும், சென்னை பல்கலைக்கழக உதவி செயற்பொறியாளர் பி.சக்திவேல் – கலைச்செல்வி தம்பதியரின் மகன் கபிலனுக்கும், வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் தலைமையில் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. முதல் நாள் வியாழக்கிழமை திருமண வரவேற்பும் நடைபெற்றது.

திருமண நிகழ்வில் தமிழக பத்திரிகையாளர்கள் சங்க மாநிலத்தலைவர் அ.ப.ஹரிஹரன் மாநில து.தலைவர் மணி, மாநில முதன்மை செய்தி தொடர்பாளர் சி.எம்.ஆதவன், தென் மண்டலத்தலைவர் கே.எஸ்.பாலகிருஷ்ணன், கிழக்கு மண்டலத் தலைவர் சரவணன், கோவை மண்டல அமைப்பாளர் கோவிந்தராஜ்,மண்டலச் செயலாளர் அசோக்குமார், திண்டுக்கல் தேனி மண்டல ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன், ஆகியோர் பங்கேற்றனர்.மேலும், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மோகன் கணேஷ், செயலாளர் குமரன், பொருளாளர் சரவணன், தேனி மாவட்டத் தலைவர் முத்து காமாட்சி, பொருளாளர் விவேக், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் முபாரக், செயலாளர் சரவணன், மதுரை மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலாளர் மைதீன், தஞ்சை மாவட்டத் தலைவர் ஞான பாஸ்கர், செயலாளர் ராஜேஷ் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.மேலும், திருமணத்தில் மதுரை அட்வர்டைசிங் பிசினஸ் கிளப் (ஏபிசி) நிர்வாகிகள், உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நபர்கள் கலந்து கொண்டனர். சன் டிவி அசத்தப்போவது யார் குழுவினர் காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.