• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரியிலிருந்து தமிழ்ப்பரப்புரை ஊர்தி பயண யாத்திரை

பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் 31_ம் ஆண்டு தமிழ்ப்பரப்புரை ஊர்தி பயண யாத்திரை கன்னியாகுமரியில் துவங்கியது.பெருங்கவிக்கோ வா. மு சேதுராமனின்.எங்கும்தமிழ், எதிலும் என்ற தமிழ் பரப்புரை ஊர்தி பயணத்தை 1992_ம் ஆண்டு தமிழறிஞர் கி .ஆ.பே.விசுவநாதன் கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி நினைவு மண்டபத்தின் முன் இருந்து பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரிசென்னை தமிழ் பரப்பு ஊர்தி பயணம் அதன் 31வது ஆண்டாக இன்று காந்தி அண்ணல் நினைவு மண்டபம் முன்பிருந்து தியாகி முனைவர் கோ.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்றது. வாழ்த் தரங்க நிகழ்வில் பணிவன்பன் அருட்பணி வின்சென்ட் அடிகளார்,தமிழ்த்தேவனார், டாக்டர் கீதா, முனைவர் சி.வ‌.சுப்பரமணியபிள்ளை, தாமஸ் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த சான்றோர்களால் வாழ்த்துகள் வழங்கினர். .இந்த ஊர்தி பயணம் எதிர் வரும் 23ம் தேதி சென்னையில் நிறைவடையும் என ஊர்தி பயணத்தின் தலைவர் கவிக்கோ வ.மு.சேதுராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *