• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கல்வி உதவித்தொகை பெற.., ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்..!

Byவிஷா

Jul 7, 2023

பிரபல எழுத்தாளர் கல்கியினுடைய பெயரில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையானது செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக வருடம் தோறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 15 லட்சம் மதிப்பிலான உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த உதவித்தொகை பெற 11, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் கல்கி அறக்கட்டளை இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.