எடப்பாடியார் தலைமையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் குடும்பம், குடும்பமாக பங்கேற்க வேண்டும் என ஆர்.பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் எடப்பாடியாரின் தலைமையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தக்கால் அமைக்கும் பணி மற்றும் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோடு கருப்புசாமி கோவில் எதிரே உள்ள திடலில் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில், ஆலோசனைக் கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்க்கண்ட தீர்மானங்களை ஆர்.பி. உதயகுமார் நிறைவேற்றியதாவது
இந்திய திருநாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, 50 ஆண்டுகால பொற்கால சரித்திரத்தில்16லட்சம் தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக புரட்சித்தலைவர் உருவாக்கினார். புரட்சித்தலைவருக்கு பிறகு இந்த இயக்கத்திற்கு வந்த சோதனைகள், வேதனைகளை தனதாக்கிகொண்டு, மீண்டும் புரட்சி தலைவரின் புனித ஆட்சியை தமிழகத்தில் மலர செய்து, கழகத்தில் ஒன்னரை கோடி தூய தொண்டர்களை நிலைநிறுத்தி, இந்தியாவிலேயே மூன்றாவது மாபெரும் இயக்கமாக கழகத்தை கழகத்தை அம்மா உருவாக்கினார்.
அம்மாவிற்கு பிறகு தாய்இல்லாத பிள்ளைகளால், தலைவன் இல்லாத தொண்டர்களாய் கழகம் தவித்த போது கலங்கரை விளக்கமாய், காலத்தின் கொடையாய், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மறு உருவமாய் எடப்பாடியார் கழகத்தையும், நாட்டு மக்களையும் நெருப்பாற்றில் நீந்தி காப்பாற்றியது மட்டுமல்லாது, இந்திய தேசமே பாராட்டு வகையில், மக்கள் போற்று மகத்தான ஆட்சியை நடத்தி காட்டினார்.
தாய் தமிழ்நாட்டை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்தி, கழகத்தின் எளிய தொண்டனும் மக்கள் சேவையாலும், உழைப்பாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம் என்ற வரலாற்றை கழகத்தில் உருவாக்கித் தந்து, ஜனநாயகத்தை கட்டி காத்து, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் இங்கு இல்லாமல் இல்லாத நிலை வேண்டும் என்ற அம்மாவின் கனவை நனவாக்கினார்.
இந்த இயக்கம் இன்னும் நூறாண்டு காலம் அன்னை தமிழகத்தில் மக்கள் சேவை ஆற்ற வேண்டும் என்று அம்மாவின் வார்த்தைகளை வேதவாக்காக கொண்டு
மக்கள் பணியாற்றுவதோடு, புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கட்டிக் காத்த இந்த மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு வரலாற்று சரித்திரம் படைக்கும் வகையில் கழக உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணியில் இரண்டு கோடி தொண்டர்களை கழகத்தில் இணைத்திட இலக்காக வைத்து, இந்த 75 நாட்களில் ஒரு கோடியே,60 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து தாய் தமிழ்நாட்டில் புதிய வெற்றி சரித்திரம் படைத்து காட்டியுள்ளார்.
உலக அரசியல் கட்சிகளின் அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையில் உலக அளவில் 7வது இடத்திலும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்தில் நிலை நிறுத்தி, கழகத்தின் புகழை இமயத்தின் உச்சிக்கு எடுத்து சென்று இயக்கத்தில் மூன்றாவது அத்தியாயம், கழக பொதுச் செயலாளர், வருங்கால முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் நேசித்த தென்தமிழகத்தில் தலைநகரம் மதுரை நடைபெறும் என்று அறிவித்த எடப்பாடியார் அவர்களுக்கு கழக அம்மா பேரவை சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்திய தேசமே திரும்பி பார்க்கும் வகையில், மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா போல நடைபெறும் இந்த மாநாட்டில், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்று எடப்பாடியார் தலைமையில், அம்மாவின் புனித ஆட்சியை தாய் தமிழ்நாட்டில் மீண்டும் மலர்ந்திட இந்த கூட்டத்தின் வாயிலாக சூளுரை இருக்கிறோம்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவசி, எஸ். எஸ் சரவணன், நீதிபதி, கருப்பையா, மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், ஏ.கே.பி சிவசுப்பிரமணி, ராமகிருஷ்ணன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், காளிதாஸ், ரவிச்சந்திரன்,பிச்சைராஜன், அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி ராஜா, நகர் கழக செயலாளர் பூமா ராஜா ,விஜயன், மாவட்ட கழக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், திருப்பதி, மாவட்ட அணி நிர்வாகிகள் சிங்கராஜபாண்டியன், சரவண பாண்டி, மகேந்திர பாண்டி, டாக்டர் சந்திரன், சேர்மன் லதா ஜெகன், முசி சோசி.முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.