• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மே 5ல் பொறியியல் படிப்புக்கான விண்ணப்பபதிவு ஆரம்பம்

Byவிஷா

Apr 30, 2024

மே 5 ம் தேதி முதல் பொறியியல் படிப்பின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மே 6ம் தேதி திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. 2024 – 25 ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு குறித்த விவரங்களை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதன்படி மே 5 ம் தேதி முதல் பொறியியல் படிப்பின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பப் பதிவு ஜூன் முதல் வாரம் வரை நடைபெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பணிகள் முடிவடைந்த பிறகு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்கான மாணவர்களின் கலந்தாய்வுகள் நடத்தப்படும். ஜூலை மாதம் 2வது வாரம் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.