• Tue. May 21st, 2024

வெயிலால் கருகும் மக்காச்சோள பயிர்கள்

ByBala

May 1, 2024

விருதுநகர் அருகே வெயில் காரணமாக பயிரிடப்பட்டுள்ள மக்கச்சோள பயிர்கள் வாடி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பமாகும் முன்னரே வெயில் வாட்டீ வதைத்து வருகிறது. மேலும் வெப்ப அலைகள் வீசும் என்பதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனைதொடர்ந்து கடும் வெயில் காரணமாக நீர் நிலைகள் வறண்டு வருகிறது. இதனால் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம், தொம்பகுளம், கரிசல்குளம், கொங்கன்குளம், கண்மாய்பட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, அப்பயநாயக்கர் பட்டி, கீழாண்மறைநாடு, ஏ.லட்சுமிபுரம், புளியடிபட்டி , கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் கிணற்றில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில் மக்காச்சோளம் பயிர்கள் பாசன வசதியின்றி கருகி வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *