இலங்கையின் கதாநாயகன் ,சிங்களர்களின் காவலனாக பார்க்கப்பட்ட ராஜபக்சே தற்போது வீழ்த்தப்பட்டுள்ளார். சிங்களர்கள் மூலம் ஹீரோவாக கொண்டாடப்பட்ட மஹிந்த ராஜபக்சேவின் குடும்பம்.. தற்போது அதே சிங்களர்கள் மூலம் தூக்கி வீசப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் ஹிட்லர் எப்படி வீழ்த்தப்பட்டானோ அப்படியே தற்போது ராஜபக்சேவும் அவரது குடும்பமும் வீழ்த்தப்பட்டுள்ளது.
உங்களை யூதர்கள் ஏமாற்றிவிட்டனர்.. உங்கள் சொத்துக்களை அபகரித்துவிட்டார்கள். அவர்கள் இந்த நாட்டில் இருக்க கூடாது.பெரும்பான்மையான நாஜிக்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் யூதர்கள் இருக்க கூடாது. என பேசி வெறுப்பு அரசியல் மூலமாக ஜெர்மனியை ஆட்சி செய்தவன் ஹிட்லர்.ஒருகட்டத்தில் நாஜிக்களாலும் உலக மக்களார் வெறுக்கப்பட்டான் ஹிட்டலர். 2ம் உலகப்போரில்ஜெர்மனியை சோவியத் படைகள் முற்றுகையிட்டபோது ஹிட்லர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான்.
அதே போலவே தமிழர்கள்மீதுதான வெறுப்பை உருவாக்கி சிங்களர்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டவன் ராஜபக்சே.
ஹிட்லர் யூதர்களை கொல்ல வதை முகாம்களை வைத்திருந்தான். யூதர்களை விதவிதமாக சித்தரவதை செய்து கொல்வானாம்.இலங்கை தமிழ் மக்கள் மீது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நிகழ்த்தி பலரை கொன்று குவித்தவன் ராஜபக்சே.போர் கைதிகளாக பிடிக்கப்பட்ட பலர் என்ன ஆனார்கள் என்பது மர்மமாக நீடிக்கிறது.
. இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை வீழ்த்திய பின் அந்த நாட்டின் ஹீரோவாக மஹிந்த ராஜபக்சே போற்றப்பட்டார். தமிழர்கள் மீதான இவரின் வன்மம் இன்னும் தீராத நிலையில்.. சிங்களர்கள் இவரை தங்கள் ஹீரோ போல கொண்டாடினார்கள்.
. மெஜாரிட்டி – மைனாரிட்டி அரசியலை செய்த பல தலைவர்கள் எல்லாம் இப்படித்தான் தங்கள் சிம்மாசனத்தை இழந்துள்ளனர். ஹிட்லரை போல வரலாற்றில் பல தலைகள் இப்படி கொட்டிக்கிடக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளவர் மஹிந்த ராஜபக்சே.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ,விலைவாசிஉயர்வு உள்ளிட்டகாரணங்களால் சிங்கள்,தமிழர்,முஸ்லிம்கள் இணைந்தே போராட்டத்தில் களம் காண்கிறார்கள்.போரட்டத்தின் உச்சகட்டமாக ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். அவரது வீடு தீவைத்துகொழுத்தப்பட்டுள்ளது.தற்போது ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்ல இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இனவாதம் பேசி ஆட்சி கட்டிலை பிடிப்பவர்களுக்கு ஹிட்லரின் நிலைதான் ஏற்ப்படும்.இதோ இலங்கையில் வீழ்த்தப்பட்ட இன்னொரு ஹிட்லர் .