• Thu. Apr 24th, 2025

இலவச மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழா

ByM.JEEVANANTHAM

Mar 21, 2025

மயிலாடுதுறையில் செயல்படும் இலவச மெட்ரிகுலேசன் பள்ளியின் ஆண்டு விழாவில் மாணவி, மானவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சி காண்போரை பரவசபடுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் பூக்கடை தெரு அருகில் செயல்பட்டு வருகிறது தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி. இந்த பள்ளி மெட்ரிகுலேசன் பள்ளியாக இருந்தாலும், ஏழை, எளியவர்களுக்கு பள்ளியில், கட்டனமில்லாமல் சேர்த்து அவர்களை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை விட அதிக சதவிகிதத்தில் மயிலாடுதுறையிலேயே தேர்ச்சியும், மதிப்பெண்ணும் பெற்ற மாணவ – மாணவிகள் பெற்ற பள்ளி இதுதான்.

பால சரஸ்வதி பள்ளியின் தாளாலர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளி மாணவ – மாணவிகளின் ஆட்டம் மக்களின் மனம் கவர்ந்து பார்வையாளர்களேயே ஆட்டம் போட வைத்தது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட மயிலாடுதுறை தொழில் அதிபர் சிவலிங்கம் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டில் பங்கு பெற்ற மாணவி, மாணவர்களுக்கு விருதுகள் வழங்கினர். நிகழ்ச்சி முடிவில், பால சரஸ்வதி பள்ளி குழுமத்தில் பள்ளியை நிர்வாகிக்கும் பேராசிரியர் முரளி நன்றி உரை ஆற்றினார்.