• Fri. Apr 19th, 2024

இடஒதுக்கீடு தீர்ப்பு அண்ணாமலை ஆதரவு

ByA.Tamilselvan

Nov 7, 2022

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதரவளித்துள்ளார்.
5இல் 4 நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த 10% இடஒதுக்கீடு சட்டம் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமலில் உள்ளது. இதனை எதிர்த்து, பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே 10% இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ப ட்டியலின,பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை பறிபோகாது என்று கூறிய அவர் இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தவறான பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *